தொடர் சரிவில் கொழும்பு பங்குச் சந்தை: பெறும் நஷ்டத்தில் முதலீட்டாளர்கள்
கொழும்பு பங்குச் சந்தை அண்மைக்காலமாக கடுமையான வீழ்ச்சியொன்றை எதிர்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார தளம்பல் நிலை காரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதே பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி
கடந்த சில நாட்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள பங்குகளை சந்தை நிலவரத்திலும் பார்க்க சற்றுக் குறைவான விலைக்கு விற்பனை செய்யத் தலைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்களும் புதிதாக பங்குகளில் முதலீடு செய்யவோ, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குகளை வாங்கவோ தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக கொழும்பு பங்குச் சந்தை தொடர்ச்சியாக வீழ்ச்சியொன்றை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.