சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறிய 250 பேருக்கு எதிராக நடவடிக்கை
வவுனியாவில் கடந்த மாதம் முதல் இன்று (27) வரையான காலப்பகுதி வரையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத்தவறிய 250 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கடந்த மாதம் முதல் இன்று (27) வரையான காலப்பகுதியில் வீதிகளில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட பலருக்கு எதிராக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் போது முககவசம் மற்றும் சமூக இடைவெளிகள் உட்பட சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட சுமார் 250 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸாரால் தொடர்ந்தும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் தேவை இன்றி நகரில் நடமாடுவதை தவிர்க்குமாறும், சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பொதுமக்கள்
பின்பற்றி நடக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .
