வடக்கில் கடற்கரையோரத்தை அபகரிக்க வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி: எழுந்துள்ள கண்டனம்
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சிகளை கைவிட வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டு காணி அபகரிப்பு
மேலும் தெரிவிக்கையில், அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பகுதியை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தொழில் புரியும் நிலையில் அதனை குழப்பும் விதத்தில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
கடந்தகாலத்தில் அப்பகுதியில் கண்டல் தாவரங்களை நட்டுவிட்டு அரசாங்கம் திட்டமிட்டு காணிகளையும் இடங்களையும் அபகரிக்கின்ற செயற்பாடுகளாகவே பார்க்கின்றோம்.
எனவே அரசாங்கம் குறித்த கபளீகர முயற்சி நடவடிக்கையை அரசாங்கம் கைவிட்டுவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
