டெஸ்ட் வரலாற்றில் கமிந்து மெண்டிஸினின் அரிய சாதனை
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஐம்பதுக்கு மேல் ஓட்ட எண்ணிக்கையை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
காலி சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது அவர் இந்த சாதனையை ஏற்படுத்தினார்.
இதன்மூலம், 147 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக அவர் பதிவாகியிருக்கிறார்.
முறியடிக்கப்பட்ட சாதனை
இந்த ஓட்ட எண்ணிக்கையுடன் இலங்கை அணி இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவின்போது, 3 விக்கெட்டுக்கு 306 ஓட்டங்களை எடுத்திருந்தது.

முன்னதாக, தனது ஏழு போட்டிகளில் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல் பெற்ற கமிந்து மெண்டிஸ், இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த பாகிஸ்தான் சவுத் சகீலின் சாதனையை முறியடித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan