பளையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து: சாரதி விளக்கமறியலில்
கிளிநொச்சி- பளைப் பகுதியில் பேருந்து விபத்துக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று நேற்று முன்தினம் (21-12-2022) மாலை கிளிநொச்சி பளைப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது.
இளம் பெண்ணொருவர் பலி
இதன்போது, இளம் பெண்ணொருவர் உயிரழந்ததுடன் 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பளைப் பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியை கைது செய்யததுடன், நேற்றைய தினம் (22-12-2022) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது பேருந்து சாரதியை எதிர்வரும் ஜனவரி மாதம் நான்காம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி
மாவட்ட நீதிவான் நீதி மன்றம் கட்டளையிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
