இஷாரா செவ்வந்தியின் பின்னணியில் தொடரும் மர்மம்: மீண்டும் சிக்கிய ஆபத்தான பொருள்
இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவிகளை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மேலும் பன்னிரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச்செல்ல உதவிகளை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் போது மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்
இதற்கமைய, மன்னார் - வெள்ளம் குளத்தில் உள்ள ஒரு பண்ணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பன்னிரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச்சென்று, பின்னர் நேபாளத்திற்கு சென்று தலைமறைவாகியிருந்த போது கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் மூன்று வாரங்கள் தலைமறைவு
இவர், இலங்கையிலிருந்து தப்பிக்க சுமார் ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாகவும், இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் உள்ளன.
இஷாரா செவ்வந்தி தப்பிச்சென்றமை தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில், முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய இரண்டு மைக்ரோ பிஸ்டல்கள் முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டன, இன்று 12 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |