கணவர் மற்றும் மகன் அதிரடி கைது! திடீரென பதவி விலகிய அநுர கட்சியின் உறுப்பினர்
பேலியகொட நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலா குமாரி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
அவருடைய கணவர் மற்றும் மகன் ஆகியோர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பதவியில் இருந்து தற்போது விலகியுள்ளார்.
பதவி விலகல் கடிதம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டமை அதிகளவில் பேசுபொருளானது.

இதன் காரணமாக, சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்க தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளும் திட்டத்திற்கு ஆதரவாகவும் அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதன்படி, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் மூலப் பிரதி தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உருகி உருகி மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்... வெளிச்சம் போட்டு காட்டிய ஜாய் கிறிஸ்டில்லா Manithan