பளையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து: 17 க்கு மேற்பட்டவர்கள் காயம் (Video)
கிளிநொச்சி பளை ஏ9 வீதியில் முள்ளியடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து
விபத்தில் ஒருவர் பலியானதுடன் 17 க்கு மேற்பட்டவர்கள்
காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (21.12.2022) மாலை 6 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
பளை முள்ளியடிபகுதியில் ஏ9 வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டுள்ளது.
இதன்போது குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் பலியானதுடன் 17 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
கடுமையான காயங்களுக்குள்ளான பலர் பளை வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகளில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து போட்டி
இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து போட்டி போட்டுக்கொண்டு வேகமாக பயணம் செய்ததன் காரணமாகவே வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
