ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை விவகாரம்: நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள சந்தேகநபர்கள்
கனடாவின்(Canada) பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஆண்டு சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இந்திய பிரஜைகளான கரன்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரண் பிரார் ஆகியோரே அந்நாட்டின் சர்ரே மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூன்று இந்தியர்களை கனடா பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா
கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், 2023 ஜூன் 18ஆம் திகதி காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாள தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை திட்டவட்டமாக இந்தியா மறுத்திருந்தது.
இந்த விவகாரத்தால், கனடா - இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் என்ற பகுதியில் வசிக்கும், இந்தியாவைச் சேர்ந்த கரண் பிரார், (22), கமல்ப்ரீத் சிங், (22), கரன்ப்ரீத் சிங், (28), ஆகிய மூன்று பேரை கனடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களுக்கும், இந்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெறுவதாக கனடா கூறியுள்ளது.
[X8VQ4OR ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
