இந்தியாவில் தொடரும் விபத்துக்கள்! 50 பேருக்கு மேற்பட்டவர்கள் பலி
இந்தியாவின் (India) சில பகுதிகளில் கடந்த இரு நாட்களுக்குள் ஏற்பட்ட வாகன மற்றும் தீவிபத்துக்களில் சுமார் 54 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் உத்தரபிரதேசம் - சாஜகான்பூரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன், கனரக வாகனம் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில், பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்பு நடவடிக்கை
இதன்போது, மூன்று மணி நேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பின்னரே பல உடல்கள் கனரக வாகனத்தின் கீழ் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அண்மையில் குஜராத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் வரை பலியானதுடன் புதுடில்லியின் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri