திருகோணமலையில் விபத்து: இருவர் படுகாயம் (Photos)
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு (24) கந்தளாய் நகரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கந்தளாய் பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 35 வயதுடைய இருவரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குருணாகல் பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்கு சென்ற லொறியொன்றே முச்சக்கரவண்டியொன்றை மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், லொறியின் சாரதியை தடுத்து வைத்து கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.




போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri