கோர விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி : மனைவி பலி - ஆபத்தான நிலையில் தந்தை மற்றும் பிள்ளை
கண்டி ரிகில்லகஸ்கட - திம்புல்கும்புர வீதியில் கடரஹேன பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடகலையில் இருந்து ரிக்கில்லகஸ்கட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனைவி பலி
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சாரதியும் 6 வயது பிள்ளையும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி ப்ளாக் பஸ்டர் வெற்றி.. அஜித் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை அசால்ட்டாக வெறும் கையில் தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan
