புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி: நால்வர் காயம்(Photo)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் நேற்றிரவு (22.01.2023) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
இரணைப்பாலை வீதியில் இரு திசைகளில் இருந்தும் சென்ற உந்துருளிகள் இரண்டு மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது உந்துருளியில் பயணித்த 23 வயதுடைய வள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த டிலுக்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக 23 வயதுடைய சிவநகர் ஒட்டுசுட்டானை சேர்ந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மரண விசாரணைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri