யாழ்.பலாலி வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 14 ஆம் திகதியன்று பலாலி வீதியில் மேற்படி குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பிறிதொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது படுகாயமடைந்த அவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(17.2.2026) அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri