மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் படுகாயம்
மன்னார் - யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பேருந்துடனும் வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது மோட்டார் சைக்கிளில் நின்ற நபரும் காயமடைந்ததுடன்,அவரது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்தில் ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி, உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
