யாழில் தந்தையும் மகனும் விபத்தில் பலி.. சாரதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
புதிய இணைப்பு
யாழ். சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும், மகனையும் அவர்களுக்கு பின்னால் வந்த கே.டி.எச் வாகனம் மோதியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவத்தினை அடுத்து வாகனத்தில் இருந்தவர்கள், வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில், வாகன சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தப்பி சென்ற வாகன சாரதி உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாக ஊரவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழில் சற்றுமுன்னர் ஏற்பட்ட கோர விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.