மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் சம்பவ இடத்திலே பலி
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக, பெட்ரோலியப்பொருட்கள் ஏற்றிச்சென்ற பவுசருடன் துவிச்சக்கர வண்டி மோதியே இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சித்தாண்டி முருகன் கோயில் பகுதியை சேர்ந்த வீரக்குட்டி ரமேஷ் (வயது 39) 3 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணை
மேலும் தேவாரபுரம் பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட இருவர் மீதே பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பவுசர் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் பவுசர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக தகவல் - குமார்





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
