கிளிநொச்சியில் கோர விபத்து - 22 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு
கிளிநொச்சி - உருத்திரபுரம் டி - 7 பகுதியில் மோட்டார் சைக்கிள் பனை மரத்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(04.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலிருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இளைஞர் உயிரிழப்பு
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் தம்பதி மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் - பின்னணி குறித்து வெளியான தகவல்