கந்தளாயில் மின் கம்பத்துடன் மோதிய கெப் வாகனம்: சாரதி தப்பி ஓட்டம்!
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் கிராமப் பகுதியில் கெப் வாகனம் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(7) இரவு இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த கெப் வாகனம் ஒன்று மின் கம்பத்துடன் மோதி பலத்த சேதமடைந்துள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணை
எனினும், இவ்விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற கெப் வாகனம் கந்தளாய் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
குறித்த வாகனம் அதிவேகமாக வந்த நிலையில், வளைவொன்றில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தே மின் கம்பத்தில் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
வாகனம் மின் கம்பத்தில் மோதும் முன்னர், அதற்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி சிறு சேதங்களை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் கெப் வாகனம் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனத்தில் இருந்த சாரதி சிறு காயங்களுடன் விபத்து நடந்த பின்னர், அவர் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
விபத்துச் சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், தப்பி ஓடிய சாரதியை தேடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




