இலங்கை குறித்த புதிய தீர்மானம்.. தமிழ் மக்கள் மத்தியில் விதைந்துள்ள நம்பிக்கை

United Nations Sri Lankan Tamils Tamils Sri Lankan Peoples
By Rakesh Oct 08, 2025 10:57 AM GMT
Report

முன்னைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு தெரிவான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் தளர்வுப்போக்கைப் பின்பற்றி வந்தது போல் தெரிந்தது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. 

இருந்தாலும், இந்த அரசாங்கமும் ஐ.நாவின் பொறப்புக்கூறல் செயற்றிட்டத்தை நிராகரித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டது. 

இருப்பினும் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் இலங்கையில் ஆட்சிப்பீடமேறும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை முடக்கினாலும், ஏதேனுமொரு நாள் நீதியை அடைய முடியும் என்ற சிறுதுளி நம்பிக்கையைப் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் விதைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கரூர் அவலம்.. விஜயின் அதிரடி நடவடிக்கை

கரூர் அவலம்.. விஜயின் அதிரடி நடவடிக்கை

போர்க்குற்றங்கள் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் குறித்து ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பக அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் லூஸி மக்கேர்னனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை குறித்த புதிய தீர்மானம்.. தமிழ் மக்கள் மத்தியில் விதைந்துள்ள நம்பிக்கை | Un Decision On Sri Lanka Sri Lankan Tamils

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் தீர்மானம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் குறைந்தபட்சம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கின்றது. அதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது இலங்கையில் ஆட்சிப்பீடமேறும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை முடக்கினாலும், ஏதேனுமொரு நாள் நீதியை அடையமுடியும் என்ற சிறுதுளி நம்பிக்கையைப் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் விதைத்திருக்கின்றது.

இலங்கையில் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்கள் யுத்த காலத்தில் மீறல் குற்றங்கள் இடம்பெறவில்லை என மறுத்து வந்ததுடன் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இடையூறுகளை ஏற்படுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரச பாதுகாப்புத்துறையைப் பயன்படுத்தியும் வந்தது.

யுத்த காலக் குற்றங்கள் தொடர்பில் உள்ளக நீதிப்பொறிமுறையை நிறுவுவதாக அளித்த வாக்குறுதியையும், அது சார்ந்த கடப்பாட்டையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாததன் காரணமாகவே 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

பொறுப்புக்கூறல் 

முன்னைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு தெரிவான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் இந்த விடயத்தில் தளர்வுப்போக்கைப் பின்பற்றுவதுபோல் தெரிந்தாலும், அந்த அரசாங்கமும் ஐ.நாவின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை நிராகரித்துள்ளது.

இலங்கை குறித்த புதிய தீர்மானம்.. தமிழ் மக்கள் மத்தியில் விதைந்துள்ள நம்பிக்கை | Un Decision On Sri Lanka Sri Lankan Tamils

அதுமாத்திரமன்றி போரின் பின்னரான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதாகவும், முக்கிய மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருப்பினும், அவற்றில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே அடையப்பட்டுள்ளது.

இந்நிலையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக உண்மையைக் கண்டறிவதற்கான உள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.

இலங்கையில் இதுவரை சுமார் 20 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அவற்றில் எந்தவொரு மனிதப்புதைகுழி தொடர்பிலும் வெற்றிகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்" என்றுள்ளது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US