யாழில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை மோதித் தள்ளிய வாகனம் : ஒருவர் பலி
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் மத்தியை சேர்ந்த சோதிலிங்கம் கஜேந்திரன் (வயது 30) என்பவரே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஏழு பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது நேற்றைய தினம் (21) வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தப்பிச் சென்ற வாகனத்தினை கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |