ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(17.07.2025) காலை 8 30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
நுவரெலியாவில் இருந்து கொழும்பு பகுதியை நோக்கி பயணித்த காரும் கொழும்பில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
@tamilwinnews ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து!
♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காருக்கு பகுதியளவிலும் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
