கணக்கு வழக்குகளை கேட்டால் ஏன் பதற்றம்..! சபையில் குறுக்கிட்ட அர்ச்சுனா
கணக்கு வழக்குகளை கேட்டால் ஏன் பதற்றம் ஆக வேண்டும். கேள்விகளைக் கேட்டால் பல நோய்கள் உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(17) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது குறித்த அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் நோயாளிகளாக உருவாக்க வேண்டாம் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கூறிய நிலையிலேயே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் யாராகவும் இருக்கலாம்
தொடர்ந்து பேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருக்கலாம்.
ஆனால் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு என்னையோ அல்லது என் சார்ந்தவர்களையோ அழைக்கும் போது கௌரவமாக நடத்த வேண்டும்.
இந்த கூட்டத்தில் இருந்து கொண்டு சத்தம் போடுவதால் எதுவும் இடம்பெறாது. இது அபிவிருத்திக்கு ஏதுவான விடயம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan
