புத்தளத்தில் காட்டு யானையால் நேர்ந்த விபத்து : ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழப்பு
புத்தளம் (Puttalam) 7ம் கட்டைப் பகுதியில் வீதியில் நின்ற காட்டு யானையைக் கண்டதில் முச்சக்கர வண்டியைத் திருப்ப முற்பட்ட போது வேனில் மோதுண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வீதியைக் கடந்த காட்டு யானையைக் கண்டு, திரும்ப முற்பட்ட போது, புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த வீதியினூடாக தினமும் காட்டு யானைகள் நடமாடுவதால் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதினாலே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த வீதியில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் இடம்பெற்று பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் இராஜாங்கனை சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த (50) வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக
விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 





                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam