கொழும்பிலிருந்து பயணித்த கார் விபத்து - இருவர் பலி
மட்டக்களப்பு, வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த 31 வயதுடைய பரமேஸ்வரன் தனுஜன் மற்றும் 31 வயதுடைய டினேகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ தினமான நேற்று இரவு கொழும்பிலிருந்து, உயிரிழந்த ஆண் அவரது உறவினரான பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி காரில் பயணித்துள்ளார்.
இந்த நிலையில் வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பட்டை மீறி கார் வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
இதனையடுத்து, அந்த பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கு சென்று உயிரிழந்த நிலையில் இருவரையும் காரில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
