முகமாலையில் பேருந்தின் மீது மோதிய டிப்பர்! பலர் வைத்தியசாலையில் அனுமதி (Video)
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (15.10.2022) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேருந்துடன், பின்னால் பயணித்த டிப்பர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது,

முகமாலையில் அமைந்துள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றி பயணித்த பேருந்து திரும்ப முற்பட்ட வேளையே விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
பலர் வைத்தியசாலையில் அனுமதி
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ். போதனா வைத்தியசாலையில் 12 ஆண்களும் 5 பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: தீபன்
முதலாம் இணைப்பு
விபத்தில் 25 பேர் காயம்
கிளிநொச்சி - முகமாலை பகுதியல் இடம்பெற்ற விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
பேருந்தொன்றின் மீது டிப்பர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam