கந்தளாயில் பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் படுகாயம்
கந்தளாய் - வென்றாசன்புர பகுதியில் பேருந்தும், மோட்டார்சைக்கிளும் இன்று (05.08.2026) காலை மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.
இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து கந்தளாய் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் காயம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று சீகிரியாவுக்குச் சென்றுவிட்டு, திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, கந்தளாய் பிரதான வீதியின் 91ஆம் கட்டைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியைக் குறுக்கறுத்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காயமடைந்தவர் வென்றாசன்புர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
