கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் விபத்து: ஒருவர் உயிரிழப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில் (PHOTOS)
இரண்டாம் இணைப்பு
கொழும்பு விபத்தில் படுகாயமடைந்த 6 பேரில் இளைஞர் ஒருவர் மரணம்
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 6 பேரில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 22 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் கல்கமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமொன்று விபத்திற்கு இலக்கானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் கல்கமுவ பகுதியில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கனரக வாகனமொன்றுடன் மோதியுள்ளது.
விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கு இலக்கான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
