மட்டக்களப்பில் கடைகளை உடைத்துக் கொண்டு விபத்திற்கு உள்ளான பாரவூர்தி
மட்டக்களப்பு நகருக்குள் பாரவூர்தியொன்று கடைகளை உடைத்துக் கொண்டு பயணித்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (23.04.2026) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த பாரவூர்தி மட்டக்களப்பு - திருமலை வீதியின் மட்டக்களப்பு நருக்குள் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவத்திற்கான காரணம்
சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது சாரதி சிறிய காயங்களுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வேறு எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam