விபத்தில் முகம் சிதைவடைந்த நபரொருவர் உயிரிழப்பு
அநுராதபுர மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யக்கல கல்குளம் வீதி, குட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் முகம் சிதைவடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri