அம்பாறை- ரீகல் சந்தியில் விபத்து: பெண் படுகாயம்
அம்பாறை- ரீகல் சந்தியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(28) மாலை இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை ரீகல் தெரு சந்திப்புப் பகுதியில் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது பலமாக மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் வாகனம் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
அத்துடன், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் இந்த மோதலில் பலத்த சேதமடைந்துள்ளன.

காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan