இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களில் முறைகேடு: மக்கள் போராட்டம் (Video)
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனசமூக நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தில் 200 குடும்பங்கள் இருந்தபோதும் வேலை செய்யும் 110 குடும்பங்களுக்கு மாத்திரம் 10 கிலோ கொண்ட அரிசி பொதி இன்று (22) தோட்ட நிர்வாகத்தால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென தெரிவித்து, தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நிவாரணத்தை நிராகரித்த மக்கள்
தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக தொழிலாளர்களுக்கு அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இதனைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிலாளர்கள் வந்தபோது 110 குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்ததை அடுத்து தோட்ட அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
அத்தோடு நிவாரணம் கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தேவையில்லை என மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தோட்ட அதிகாரிகள் அரிசி வழங்கும் நிலையத்தை மூடி சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அரிசி வைத்திருந்த களஞ்சியசாலையை முற்றுகையிட்டனர் .

அதேவேளை கல்மதுரை, ஆகரல்பெத்த, மோர்சன் ஆகிய தோட்டத்திற்கு வழங்கப்பட இருந்த அரிசியையும் வாகனத்தில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

| வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில் |
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam