தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் : ஆறாத வடுக்களின் சாட்சியம்
கறுப்பு ஜுலை (Black July), இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளை சுட்டிக்காட்டும் சொல்.
1983, ஜுலை 24ஆம் திகதி இரவு, கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கப்பட்டு பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
அன்றிலிருந்து ஏழு நாட்களில், முக்கியமாக பெரும்பான்மையினத்தவர்கள் தமிழரை தாக்கினர். உயிருடன் எரித்தனர். அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்தனர்.
தமிழ் மக்களை குறி வைத்து, நாட்டின் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தனர்.
மில்லியன் கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, அவர்கள் நிர்கதியாக்கப்பட்டமை இன்றும் மனதை உலுக்கும் சமபவமாக பதிவாகியுள்ளது.
அத்தகைய, இனவழிப்புக்கு பின்னணியில், நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களும் அவர்களை சார்ந்த அரசியல்வாதிகளுமே வேரூன்றி இருந்தனர்.
இந்நிலையில், கறுப்பு ஜுலை காலத்திலிருந்து இன்று வரை தொடரும் இந்த இனவாத பிரச்சினை குறித்து மக்களிடையே இன்னமும் ஆறாதிருக்கும் வடுக்களை வெறும் வார்த்தையால் விபரிக்க இயலாது.
இது தொடர்பில் அவர்களிடையே நிலவும் சில ரணங்களின் ஒருபகுதியாக வருகின்றது கீழ்வரும் காணொளி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
