கேக் புகைப்படங்களுடன் வந்த மோசமான படம் - அதிர்ச்சியடைந்த பெண்
கண்டியில் நடைபெற்ற கேக் கண்காட்சியை புகைப்படம் எடுத்த புகைப்படக்கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்ஸ்அப் மூலம் கேக் கண்காட்சி ஏற்பாட்டாளருக்கு அனுப்பிய புகைப்படம் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்பாட்டாளருக்கு அனுப்பிய புகைப்படங்களுக்குள் தகாத புகைப்படம் ஒன்றையும் அனுப்பியதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
புகைப்படக் கலைஞர்
அதற்கமைய கண்டி கணினி குற்றப் பிரிவு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேக் கண்காட்சியின் புகைப்படங்களுடன் இந்த தகாத புகைப்படமும் தவறுதலாக குறித்த பெண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புகைப்படக்கலைஞர் தெரிவித்துள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்ட 66 வயதான புகைப்படக் கலைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan