இலங்கையில் 18 அகவைக்குட்பட்ட 45,000 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
இலங்கையில் இதுவரை 18 அகவைக்குட்பட்ட சுமார் 45,000 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் ஆலோசகர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 20,000 பேர் 14 அகவை மற்றும் அதற்கும் குறைவானவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில், 14 சிறுவர்கள் கோவிட் நோய்த்தொற்றால் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் அறிகுறிகள் இல்லாத சிறுவர்கள் தொலைபேசிகள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். இருப்பினும், இரண்டு அகவைக்கும் குறைவான குழந்தைகள் மருத்துவமனையில் வைக்கப்படுவார்கள் மற்றும் இரண்டு அகவைக்கு மேற்பட்டவர்கள் வீட்டு பராமரிப்புக்கு மாற்றப்படுவார்கள்.
இதற்கிடையில், லேசான அறிகுறிகளுடன் உள்ள இரண்டு அகவைக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்ற இடைநிலை பராமரிப்பு மையங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு உள்ளது மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களைக் கையாள்வது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை 14 முதல் 30 அகவைக்குப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
