வடக்கு பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ நாற்பதாயிரம் வெடிபொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் முப்பத்தொன்பதாயிரத்து நூற்று முப்பத்துநான்கு ( 39,134 ) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுத்து வரும் நிறுவனமே இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளையகற்றும் செயற்பாட்டில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிதியுதவியுடன் ஸார்ப் ( SHARP ) எனப்படும் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
அபாயகரமான வெடிபொருட்கள்
கடந்த எட்டு ஆண்டுகளில் இருபத்தெட்டு இலட்சத்து பன்னிரண்டாயிரத்து எழுநூற்று அறுபத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் ( (2,812,768sqm) ) குறித்த வேலைத்திட்டத்தை இது முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 மார்ச் மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதுவரை 2,812,768 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 39,134 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
