இஸ்ரேலுக்கு உளவுச்செய்தி அனுப்பிய 8 இந்தியர்கள் விவகாரம் : தீர்ப்பை மாற்றியமைத்த கட்டார்
உளவு பார்த்த குற்றச்சாட்டில் தற்போது கட்டாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனையை கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
எனினும் விரிவான தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயில் நடந்த கூட்டத்தின் போது கத்தாரின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை
இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த அதிகாரிகளின் நிலைமைகள் தொடர்பான அடுத்த படிகளை தீர்மானிக்க சட்டப்பிரதிநிதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த வழக்கின் நடவடிக்கைகள் இரகசியமான மற்றும் உணர்திறன் மிக்கவை என்பதன் காரணமாக ,இந்த நேரத்தில் மேலும் எந்த கருத்தையும் கூறுவது பொருத்தமாக இருக்காது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |