இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து வரும் அறிவுறுத்தல்
இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் நிபுணரான வைத்தியர் சிந்தன பெரேரா நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.
மக்களை முகக்கவசம் அணியுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே வைத்தியர் சிந்தன பெரேராவும் நாட்டு மக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது.
வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம்.
உயிரியல் மாதிரிகள் பரிசோதனை
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்ச்சல் மற்றும் சளி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
புதிய கோவிட் திரிபு வைரஸ் பரவுவது எதிர்காலத்தில் உறுதியாகத் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்நாட்களில் பரவும் சளி காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவாவது கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட பொதுவான சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதில் மெத்தனப் போக்கின்றி நடந்து கொள்ள வேண்டும் என சமூக அவதானிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |