நாடாளுமன்ற உறுப்பினராக அப்துல் வஸீத் பதவியேற்பு
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முகமது ஷெரிப் அப்துல் வஸீத் சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
முகமது சாலி நளீம் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற இடத்தை நிரப்ப வஸீத் எம்.பி.யாக பதவியேற்றுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரால் அப்துல் வஸீத் தேசியப் பட்டியல் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாலி நளீம் மார்ச் 14 அன்று பதவி விலகினார்.
டிசம்பர் 03 ஆம் திகதி சபாநாயகர் முன்னிலையில் நளீம் பத்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |