14 நாடுகளுக்கு புதிய வரி உயர்வு : பட்டியலை வெளியிட்ட ட்ரம்ப்
ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மியான்மார், தென்னாப்பிரிக்கா, மலேசியா, பங்களாதேஷ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார்.
அமெரிக்க வணிகங்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து
தென் கொரியா மற்றும் ஜப்பானுடன், மியான்மார் மற்றும் லாவோஸிலிருந்து வரும் பொருட்களுக்கு 40வீத வரி, தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 36வீதம், செர்பியா மற்றும் பங்களாதேஷிலிருந்து வரும் பொருட்களுக்கு 35 வீதவரி இந்தோனேசியாவிற்கு 32வீதவரி, தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 30வீதம மற்றும் மலேசியா மற்றும் துனிசியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25வீத வரி விதிக்கும் திட்டங்களை ட்ரம்ப் வகுத்துள்ளார்.
வரிகளை அறிமுகப்படுத்துவது அமெரிக்க வணிகங்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் என்றும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைகளை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவில் விலைகளை உயர்த்தும் மற்றும் வர்த்தகத்தைக் குறைக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பட்டியலிடப்பட்ட பங்குகள்
ட்ரம்பின் வரி அறிவிப்புடன் அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்கு குறியீடுகள் நேற்று சரிவடைந்துள்ளன.
குறிப்பாக டொயோட்டாவின் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட பங்குகள் 4வீதம சரிந்தன.
அமெரிக்க வர்த்தக தரவுகளின்படி, ஜப்பான் கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு 148 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை அனுப்பியதுடன், இது அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய இறக்குமதி விநியோகஸ்தராக மாறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |