அதிக கொடுப்பனவுகளை பெறவுள்ள கனேடிய தொழிலாளர்கள்
எதிர்வரும் 11ஆம் திகதி(11.07.2025) முதல் கனேடிய தொழிலாளர்கள், கனடா தொழிலாளர் நலத்திட்டத்திலிருந்து(CWB) அதிக ஊதியங்களைப் பெறுவார்கள்.
இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி உதவியை வழங்குகின்றது.
இதற்கமைய, தனியாக வாழ்பவர்கள் 1,633 டொலர்கள் வரையிலும் குடும்பங்கள் 2,813 டொலர்கள் வரையிலுமான நிதி உதவியை பெறுவார்கள்.
தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள்
மேலும், அவர்கள் ஊனமுற்றோர் துணைத் தொகைக்குத் தகுதி பெற்றால் கூடுதலாக 843 டொலர்களை பெறலாம்.
இந்த கொடுப்பனவுக்கு தகுதி பெற நீங்கள் ஆண்டு முழுவதும் கனடாவில் வசிக்க வேண்டும் என்பதோடு 19 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் பெறும் தொகை உங்கள் வருமானத்தைப் பொறுத்தது என்பதோடு நீங்கள் அதிகமாக சம்பாதித்தால், உங்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்.
கொடுப்பனவுகள்
2024 இல் ஏற்கனவே பணம் பெற்றிருந்தால் நீங்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. உங்கள் வரிகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்து சரியான படிவங்களை நிரப்பவும்.
ஜூலை 11, ஒக்டோபர் 10 மற்றும் ஜனவரி 9 என வருடத்தில் கொடுப்பனவுகள் மூன்று பகுதிகளாக வரும்.
உங்கள் கொடுப்பனவு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் தகுதி பெறுகிறீர்களா என்பதைச் சரிபார்த்து, கொடுப்பனவு திகதிக்குப் பிறகு சுமார் 10 வணிக நாட்கள் காத்திருக்கவும். பிரச்சினை தொடர்ந்தால், உதவிக்கு கனடா வருவாய் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |