நான் இறக்கவில்லை.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஹமீத்
நான் இறக்கவில்லை. ஒரு செய்தியை தீர விசாரித்து பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது என தான் மரணித்து விட்டதாக பரவிய வதந்திகள் குறித்து பிரபல ஊடகவியலாளர் பி. எச். அப்துல் ஹமீத் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட காணொளியிலேயே இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாண்டவன் மீண்டுவந்து பேசுகின்றானே என்று சிலர் வியந்து நோக்கக் கூடும்.
நேற்று இரவு இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை.
அந்த விஷம செய்தியை கேட்டு ஆயிரம், பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்தி கொண்டார்கள்.
சிலர் என் குரலை கேட்டதும் கதறி அழுததை கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என்று நான் நினைத்து கொண்டேன்.
செத்து பிழைப்பது என்பது எனக்கு மூன்றாவது அனுபவம் என பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளிப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |