கைவிடப்பட்ட தொடருந்து பெட்டிகளை விற்பனை செய்ய தீர்மானம்
இலங்கை தொடருந்து திணைக்களத்துக்குச் சொந்தமான, பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட தொடருந்து பெட்டிகளை ஏல விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைக்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இவ்வாறான தொடருந்து பெட்டிகள் ஏராளமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
பராமரிப்பு செலவு
அவற்றை பராமரிப்பதில் ஏற்படும் செலவைக் குறைக்கும் நோக்கில் அவற்றை ஏல விற்பனை மூலம் விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பழைய தொடருந்து பெட்டிகள் இரும்பு எடைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா உணவகங்கள், சிறியளவிலான காட்சியறைகள் போன்ற பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்கு இவை பொருத்தமானவை என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
