தீவிர சிகிச்சை பெற்று வரும் ஹரக் கட்டா.. நிராகரிக்கப்பட்ட கோரிக்கை!
பாதாள உலகக்கும்பலில் முக்கிய புள்ளியான ஹரக்கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக, சிக்குன்குன்யா நோயினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போதைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவின் நிலை சற்று மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலத்த பாதுகாப்பு
அதன்படி, பிரபல போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக்கும்பல் புள்ளியுமான ஹரக் கட்டா, கொழும்பு தேசிய மருத்துவமனையின் 37ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வார்ட்டில் வேறு எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை. வார்ட் முழுக்க விசேட அதிரடிப்படை மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையே தனக்கு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற அனுமதிக்குமாறு ஹரக்கட்டா விடுத்த வேண்டுகோளை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
