உலகளாவிய முன்னணியின் பாதுகாப்பு அச்சாக மாறிய ஈரான்! மீண்டும் பொதுவெளியில் கமேனி
உலகளாவிய சியோனிசத்தால் வழிநடத்தப்படும் தவறான முன்னணிக்கு எதிராக ஈரானை ஒரு உலகளாவிய முன்னணியின் பாதுகாப்பு அச்சாக அயதுல்லா அலி கமேனி உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீதான 12 நாள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் விடாமுயற்சியின் கருப்பொருள்கள், எனும் தலைப்பில் கமேனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13ஆம் திகதி தாக்குதல் நடத்தியது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள்
இதன்போது ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் நேற்று தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னியின் ஹுசைனியாவில் ஆஷுரா இரவு துக்க விழா நடைபெற்றது,
இதில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா செய்யித் அலி கமேனி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 18 மணி நேரம் முன்

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை News Lankasri
