பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஆடிக்கூழ் நிகழ்வுகள்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் இன்றையதினம் (17) காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டனர்.
மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் முழுமையான ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
கிளிநொச்சி
தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினமான ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(17) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சிறப்புற கொண்டாடப்பட்டது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்ட செயலக நலன்பரிச் சங்கமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.















