நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்

Batticaloa Sri Lankan Peoples Hinduism
By Bavan Aug 12, 2026 08:12 AM GMT
Report

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12.08.2026) மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 03ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10ஆம் நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம்

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க, பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு செய்தனர்.

ஆத்ம சாந்தி பிரார்த்தனை

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதிர்கடன் செலுத்தி ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

இத்தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு மாமாங்கேஸ்வரரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்

வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்

கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: இளைஞர் பலி - மற்றுமொருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்...!

கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: இளைஞர் பலி - மற்றுமொருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்...!

மேலதிக தகவல் - ஆஷிக்

மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம்(12) காலை ஆடி அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை வசந்த மண்டபத்தில் கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றுள்ளது.

ஆடி அமாவாசை விசேட பூஜை

அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட சென்றார். பாலாவி தீர்த்தம் இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா வந்தார்.

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை,மோச்ச விளக்கு ஏற்றப்பட்டு,பக்த அடியார்கள் இறந்த தமது முன்னோர்களை நினைவு கூறி வழிபட்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

மேலதிக தகவல் -  தீபன்

ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் இன்றைய தினம்(12) புதன்கிழமை நடைபெற்றது.

ஆடி அமாவாசை பூசை

தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு, தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.

அதேவேளை மாவிட்டபுர கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்த கரையில் இடம்பெற்றது.

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

மேலதிக தகவல் -  மலைவாஞ்சன்

ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் தானம் வழங்கும் சிறப்பு வழிபாடுகள் நுவரெலியா காயத்திரி சித்தர் பீடத்தில் இன்று 12ஆம் திகதி நடைபெற்றன.

ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படும் ஆடி அமாவாசை தினம், முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் மேற்கொள்ளப்படும் முக்கியமான நாளாக இந்து சமயத்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை

இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பு முக்கியத்துவம் பெறும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, நுவரெலியா காயத்திரி சித்தர் பீடத்தில் இன்று விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து வருகை தந்த இந்து சமயத்தவர்கள் கலந்து கொண்டு, தமது முன்னோர்களை நினைவுகூர்ந்து பாரம்பரிய முறைப்படி தர்ப்பணம் வழங்கியுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

மேலும், இறந்த தமது உறவினர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் ஆசீர்வாதம் குடும்பத்தினருக்கு கிடைக்கவும் வேண்டி விசேட பிரார்த்தனைகளில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்போது முன்னோர்களை நினைவுகூர்ந்து தானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமய மரபுகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, காயத்திரி யாகம் மற்றும் சித்தர் யாகம் உள்ளிட்ட விசேட யாக வழிபாடுகளும் ஆலயத்தில் நடைபெற்றுள்ளன. இந்த சிறப்பு யாக வழிபாடுகளில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலிருந்து வருகை தந்த பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். 

நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் | Aadi Amavasya Theerthotsavam At Mamangeswarar

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US