வவுனியாவில் இளைஞன் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
வவுனியா - கோவில்குளம் பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளரினால் இளைஞன் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(13.02.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

சம்பவ தினத்திற்கு முதல் நாள்(12) இரவு வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் இன்று (13.02.2024) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri