குளிக்கச் சென்ற ஐந்து யுவதிகளில் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் (Photos)
புத்தளத்தில் அமைந்துள்ள இரட்டைக் குளத்தில் குளிக்கச் சென்ற ஐந்து யுவதிகளில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (21.05.2023) மாலை புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட புளிச்சாக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
உடப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சன்முகம் கேதீஷா என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினமான நேற்றைய தினம் மாலை ஐந்து யுவதிகள் புளிச்சாக்குளம் இரட்டைக் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட நால்வர்
யுவதிகள் திடீரென நீரில் மூழ்குவதைக் கண்ட அயலவர்கள் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
இதன்போது நால்வர்களை மாத்திரமே அவர்களினால் காப்பாற்ற முடிந்துள்ளது.
30 நிமிடங்களுக்குப் பிறகு மற்றைய யுவதி மீட்கப்பட்ட நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தள ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முந்தல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



