ரணிலை வெளியே அழைத்து செல்ல முடியாத நிலை! கேள்விக்குறியாகியுள்ள நீதிமன்ற விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல முடியாது என மருத்துவ பரிந்துரையில் கூறப்பட்டால், அவரை நாளை(26) விசாரணைக்கு அழைத்துச் செல்ல முடியாது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU) சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது உடல்நிலை குறித்து ஐந்து நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழுவால் இன்று(25) பிற்பகல் சிறப்பு அறிக்கை ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ரணிலின் உடல்நிலை
குறித்த அறிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலைக்குத் திரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri